கேகாலை, தெரணியகல பகுதியில் போலி இலக்கத்தகடு பொருத்தப்பட்ட ஜீப் வாகனத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் அவிசாவளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவிசாவளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஜீப் வாகனம் ஏதேனும் குற்றச் செயல்களுக்கு பயன்படுத்தப்பட்டா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் அவிசாவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவர்களை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அவிசாவளை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
0 Comments